சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம் + "||" + Famous Hollywood actress dies

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகை மரணம் அடைந்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை டயானா ரிக். இவர் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்றார். மிட்சம்மர் நைட்ஸ் டிரீம், த அசாசினேஷன் பியரு, த ஹாஸ்பிட்டல், ஸ்னோ ஒயிட், பிரீத் உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டயானா ரிக்குக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் லண்டனில் உள்ள வீட்டில் டயானா ரிக் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. டயானா ரிக் மகள் ராச்சல் ஸ்ரிலிங் கூறும்போது, “எனது அன்பான அம்மா மரணம் அடைந்தார். அதிகாலையில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவரை சுற்றிலும் குடும்பத்தினர் இருந்தோம். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார். தொழிலில் அதிக ஈடுபாடு காட்டினார்” என்றார். டயானா ரிக் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.