சினிமா செய்திகள்

இளம்பெண் தற்கொலை: டி.வி. நடிகையை போலீஸ் தேடுகிறது + "||" + Teen commits suicide: TV Police are looking for the actress

இளம்பெண் தற்கொலை: டி.வி. நடிகையை போலீஸ் தேடுகிறது

இளம்பெண் தற்கொலை:  டி.வி. நடிகையை போலீஸ் தேடுகிறது
இளம்பெண் தற்கொலை வழக்கில் டி.வி. நடிகையை போலீஸ் தேடுகிறது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டியம் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ரம்சி என்ற பெண்ணும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். திருமணத்துக்கு இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் ரம்சி கர்ப்பமானார். இதையடுத்து அவரை விட்டு ஹாரிஸ் ஒதுங்கினார். ஹாரிசுக்கு வேறு வசதியான இடத்தில் பெண் பார்க்கவும் தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரம்சி வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாரிசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஹாரிசின் அண்ணன் மனைவி லட்சுமி பிரமோத்தும் ரம்சிக்கு எதிராக செயல்பட்டு கர்ப்பத்தை கலைக்கும்படி வற்புறுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. லட்சுமி பிரமோத் பவுர்ணமி திங்கள், பூக்கலாம் வரவாயி உள்பட பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். அவரை போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டார். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.வி. நடிகையை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார் போலீசார் தீவிர விசாரணை
திருமணத்துக்கு மறுத்த டி.வி. நடிகையை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. நடிகை உயிரை பறித்த 3 பேரின் காதல் போட்டி; பட அதிபரை போலீஸ் தேடுகிறது
காதல் போட்டியில் நடிகை உயிரை பறித்த பட அதிபரை போலீஸ் தேடுகிறது.