சினிமா செய்திகள்

சீனுராமசாமி இயக்கிய விஜய்சேதுபதியின் 2 படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்? + "||" + 2 films of Vijay Sethupathi directed by Seenuramasamy released on ODT?

சீனுராமசாமி இயக்கிய விஜய்சேதுபதியின் 2 படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

சீனுராமசாமி இயக்கிய விஜய்சேதுபதியின் 2 படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலால் தியேட்டர்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புதிய படங்கள் திரையரங்குகளுக்கு பதிலாக இணையதளமான ஓ.டி.டி.யில் வெளியாகி வருகின்றன. 

பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படம் அடுத்த மாதம் 2-ந்தேதி ஜிபிளக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 2 படங்களையும் சீனுராமசாமி இயக்கி உள்ளார். அவர் கூறும்போது, “மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய 2 படங்களும் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கொரோனா பரவலை பொறுத்து தியேட்டரா? ஓ.டி.டி. தளமா? என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்வார்கள். மாமனிதன் படத்தில் இளையராஜாவும், யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து இசையமைத்து இருப்பது சிறப்பு. பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இளையராஜா பிறந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினோம். பண்ணைய புரத்தில் பிறந்த குயிலே என்ற பாடலும் உள்ளது. இடம்பொருள் ஏவல் படத்தில் விஜய்சேதுபதியும், விஷ்ணுவிஷாலும் இணைந்து நடித்துள்ளனர்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா? விஜய் சேதுபதி வருத்தம்
விஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
2. பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
3. 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
4. விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.
5. ‘லாபம்’ படம் ஓ.டி.டி.யில் ரிலீசா? விஜய் சேதுபதி விளக்கம்
“லாபம் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகாது. திரையரங்குகளில்தான் வெளியிடப்படும்” என விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.