சினிமா செய்திகள்

உடல் எடையை குறைத்தார் விஜயகாந்த் மூத்த மகனும் நடிக்க வருகிறார் “அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன்” என்று பேட்டி + "||" + Vijaykanth's eldest son, who lost weight, is also coming to play

உடல் எடையை குறைத்தார் விஜயகாந்த் மூத்த மகனும் நடிக்க வருகிறார் “அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன்” என்று பேட்டி

உடல் எடையை குறைத்தார் விஜயகாந்த் மூத்த மகனும் நடிக்க வருகிறார் “அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன்” என்று பேட்டி
உடல் எடையை குறைத்தார் விஜயகாந்த் மூத்த மகனும் நடிக்க வருகிறார் “அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன்” என்று பேட்டி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா விஜயகாந்த் தம்பதிகளுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானார்.

அடுத்து அவர், ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்தார். இப்போது, ‘மித்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பூபாலன் டைரக்டு செய்கிறார். இவர், ‘சிறுத்தை’ சிவாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். கதாநாயகி முடிவாகவில்லை. படப்பிடிப்பு தொடங்கி, 7 நாட்கள் கடந்த நிலையில், ‘கொரோனா’ நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சண்முக பாண்டியன் உடல் எடையை குறைப்பதற்காக ஸ்காட்லாந்து சென்றார்.

தற்போது அவர் உடல் எடை கணிசமாக குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘மித்ரன்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் நடிக்க வருகிறார். இதற்காக இவரும் தீவிர உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து வருகிறார். இவருக்கு விஜயகாந்தின் சாயல் நிறைய இருப்பதாகவும், அதுவே அவருடைய பெரிய பலம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனால்தான் அவர் நடிக்க வருவதாக அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள்.

இதுபற்றி விஜயபிரபாகரன் கூறும்போது, “அப்பாவின் பெயரை நான் காப்பாற்றுவேன்” என்றார். இதற்கிடையில், விஜயபிரபாகரன், தே.மு.தி.க. கட்சிக்காக பிரசார பாடல் காட்சி ஒன்றில் நடித்து இருக்கிறார்.