சினிமா செய்திகள்

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் சூப்பர் குட் பிலிம்சின் 90-வது பட டீசர் + "||" + Kalathil Santhippom Teaser: Jiiva and Arulnithi Give Friendship Goals in This Action-Packed Entertainer

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் சூப்பர் குட் பிலிம்சின் 90-வது பட டீசர்

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் சூப்பர் குட் பிலிம்சின் 90-வது பட டீசர்
ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்’ தீபாவளிக்கு வெளியாகிறது.
சென்னை

தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த பட நிறுவனங்களில், ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்சும் ஒன்று. இந்த பட நிறுவனம் தயாரித்த முதல் படம், ‘புதுவசந்தம்.’ அதில் முரளி, சார்லி, சித்தாரா உள்பட பலர் நடித்து இருந்தார்கள். பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்ரமன், ‘புது வசந்தம்’ படத்தின் மூலம்தான் டைரக்டராக அறிமுகமானார்.

விஜய், அஜித், சரத்குமார் போன்ற கதாநாயகர்களை, நட்சத்திர கதாநாயகர்களாக உயர்த்தியது, இந்த பட நிறுவனம்தான் என்று சொன்னால், அது மிகையாகாது. நடிகர்களைப்போல் பல டைரக்டர்களின் அந்தஸ்தையும் இந்த பட நிறுவனம் உயர்த்தியது.

இதுவரை 89 படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ், தனது 90-வது தயாரிப்பாக, ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தை அறிவித்து இருக்கிறது. இதில் ஜீவா, அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம், இது.

கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். காரைக்குடி செட்டியாராக, ‘அப்பச்சி’ என்ற மாறுபட்ட வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். பாலசரவணன், இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, ரேணுகா மற்றும் பலரும் நடிக்கிறார்கள். ‘பிசாசு’ பட புகழ் பிரக்யா, கவுரவ வேடத்தில் வருகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்.ராஜ சேகர் டைரக்டு செய்கிறார். தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்
2. நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் - பட தயாரிப்பு நிறுவனம்
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.
3. ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு!
ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
4. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.
5. தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து மனந்திறந்த நடிகை டாப்சி
தனது வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து நடைகை டாப்சி பன்னு மனந்திறந்து பேட்டி அளித்து உள்ளார்.