சினிமா செய்திகள்

‘மீ டு’ இயக்கத்தால் தப்பிய சாய்பல்லவி + "||" + Saipallavi escapes the 'Me Too' movement

‘மீ டு’ இயக்கத்தால் தப்பிய சாய்பல்லவி

‘மீ டு’ இயக்கத்தால் தப்பிய சாய்பல்லவி
சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் மீ டூ இயக்கம் தன்னை காப்பாற்றிய சம்பவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான சாய்பல்லவி பிரேமம் என்ற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் பட வாய்ப்புகள் குவிந்தன. தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே. படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் மீ டூ இயக்கம் தன்னை காப்பாற்றிய சம்பவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு படத்தின் இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் அப்படி நடிக்க முடியாது என்று மறுத்தேன். ஆனாலும் தொடர்ந்து முத்தகாட்சியில் நடிக்குமாறு நிர்ப்பந்தம் கொடுத்தார். உடனே அந்த படத்தின் கதாநாயகன் இயக்குனரை பார்த்து இந்த பிரச்சினையை மீ டூ இயக்கத்துக்கு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை கேட்கவில்லை. மீ டு என்னை தப்பிக்க வைத்தது” என்றார்.