சினிமா செய்திகள்

தலைவி படத்தில் ‌எம்.ஜி.ஆர். ஆக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் புதிய போஸ்டர் வெளியீடு + "||" + MGR in the leader film. New poster release of actor Aravindsamy

தலைவி படத்தில் ‌எம்.ஜி.ஆர். ஆக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் புதிய போஸ்டர் வெளியீடு

தலைவி படத்தில் ‌எம்.ஜி.ஆர். ஆக  நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் புதிய போஸ்டர் வெளியீடு
தலைவி படத்தில் ‌எம்.ஜி.ஆர். ஆக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,

மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில்  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.  எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கிறார்.

விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத், அரவிந்தசாமி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் இளமை கால வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமானது, அரசியல் சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.  இந்த படத்திற்காக கங்கனா ரணாவத் பரதநாட்டியம் கற்று நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.  கடந்த ஜூன் மாதம் 26ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.  எனினும், கொரோனா தொற்றால் படப்பிடிப்பு தள்ளி போனது.

இதன்பின்னர் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியது.  இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, கடந்த 12ந்தேதி 'தலைவி' படப்பிடிப்பு நிறைவு பெற்றது.  இதனையடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ‌எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு, தலைவி படத்தில் ‌எம்.ஜி.ஆர். ஆக  நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பார்சல்களில் வழங்க பேக்கரிகளுக்கும் அரசு அனுமதி அரசாணை வெளியீடு
பார்சல்களில் வழங்க பேக்கரிகளுக்கும் அரசு அனுமதி அரசாணை வெளியீடு.
2. எகிப்து ரெயில் விபத்தில் 19 பேர் பலி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
எகிப்து ரெயில் விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதார மந்திரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.
3. இதுதான் ரங்கசாமி பாணி: வேட்புமனு முடிந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ரங்கசாமி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
4. அசாம் சட்டசபை தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி நாளை வெளியிடுகிறார்.
5. மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வருகிற 21ந்தேதி வெளியீடு
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கொல்கத்தாவில் வருகிற 21ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிடுகிறார்.