சினிமா செய்திகள்

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து 160 பெட்டிகளில் பொருட்கள் இளையராஜாவிடம் ஒப்படைப்பு + "||" + Delivery of 160 boxes of goods from Prasad Studio to Ilayaraja

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து 160 பெட்டிகளில் பொருட்கள் இளையராஜாவிடம் ஒப்படைப்பு

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து 160 பெட்டிகளில் பொருட்கள் இளையராஜாவிடம் ஒப்படைப்பு
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா 35 ஆண்டுகளாக ரிக்கார்டிங் தியேட்டர் வைத்து இசையமைத்து வந்தார். அவருக்கு அங்கு 5 அறைகள் இருந்தன.
இந்த நிலையில் இளையராஜாவை அறையில் இருந்து காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்தியது. இதனால் ஸ்டூடியோ நிர்வாகம் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக இளையராஜா போலீசில் புகார் செய்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ரிக்கார்டிங் தியேட்டரில் இளையராஜா நேற்று முன்தினம் ஒரு நாள் தியானம் செய்யுவும் அவருக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்லவும் ஸ்டூடியோ நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் அவர் வரவில்லை. ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்திய அறை தகர்க்கப்பட்டு இருப்பதாகவும் பொருட்களை வேறு அறையில் அள்ளிப்போட்டுள்ளனர் என்றும், இதனால் மன உளைச்சலில் இளையராஜா ஸ்டூடியோவுக்கு வரவில்லை என்றும் அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

கோர்ட்டு நியமித்த வழக்கறிஞர் ஆணையர் லட்சுமி நாராயணன் தரப்பில் கூறும்போது, “ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்கள் காலை முதல் இரவு வரை கணக்கெடுக்கப்பட்டு 160 அட்டை பெட்டிகளில் வைத்து இளையராஜா பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் அறையில் இருந்த ரூ.55 ஆயிரத்து 520 ரொக்கம், விருதுகள், காசோலைகள், 3 பீரோ ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டு விட்டது” என்றனர். இந்த பொருட்கள் லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

1. ‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்
ஒரு கிராமத்தில் சட்டத்துக்கும், தர்மத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சட்டம் வென்றதா, தர்மம் வென்றதா? என்பதை கருவாக வைத்து, ‘பேராளன்’ என்ற படம் தயாராகிறது.
2. தியானம் செய்துவிட்டு இசைக்கருவிகளை எடுக்க, பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா இன்று செல்கிறார்
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா இன்று செல்கிறார். அங்கு தியானம் செய்துவிட்டு, தனது இசைக்கருவிகளை எடுத்துச் செல்கிறார்.
3. இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் - ஸ்டூடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
இசையமைப்பாளர் இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் என அந்த ஸ்டூடியோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க முடியாது -பிரசாத் ஸ்டூடியோ திட்டவட்டம்
பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டு உள்ளது.