சினிமா செய்திகள்

ஆசிரமத்தில் தியானம்: ஆன்மிகத்துக்கு மாறிய அமலாபால் + "||" + Meditation in the Ashram: Amalapal converted to spirituality

ஆசிரமத்தில் தியானம்: ஆன்மிகத்துக்கு மாறிய அமலாபால்

ஆசிரமத்தில் தியானம்: ஆன்மிகத்துக்கு மாறிய அமலாபால்
ஆன்மிகத்துக்கு மாறிய நடிகை அமலாபால், ஆசிரமத்தில் தியானம் செய்து வருகிறார்.
நடிகை அமலாபால் ஆன்மிகத்துக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் எனக்கு ஆன்மிக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது. எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்து இருக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் தியானம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உள்மனதை பற்றி கற்றுக்கொள்ள எனது 19-வது வயதில் முதல் முதலாக ஈஷா யோகா மையத்துக்கு சென்றேன். அப்போது சத்குருவிடம் 3 கேள்விகள் கேட்டேன். அதற்கான விடைகள் யோகா பயிற்சியில் இருக்கிறது என்றார். அது எனக்கு அப்போது புரியவில்லை. அதை ஏற்றிருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வந்து இருக்கும். 10 ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்த பிறகு எனது வாழ்க்கை முழு வட்டத்துக்குள் வந்து விட்டது. இது ஆன்மிகத்தின் சிறப்பான தொடக்கம்’’ என்று கூறியுள்ளார்.

ஆன்மிகத்துக்கு மாறிய அமலாபாலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Tags :