சினிமா செய்திகள்

ரசிகர்கள் மோதலுக்கு இடையில் மம்முட்டியை சந்தித்த நடிகர் மோகன்லால் + "||" + Actor Mohanlal meets Mammootty amidst fans clash

ரசிகர்கள் மோதலுக்கு இடையில் மம்முட்டியை சந்தித்த நடிகர் மோகன்லால்

ரசிகர்கள் மோதலுக்கு இடையில் மம்முட்டியை சந்தித்த நடிகர் மோகன்லால்
மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக் கொள்வது உண்டு.
மோகன்லால் படங்கள் ரிலீசாகும்போது மம்முட்டி ரசிகர்களும், மம்முட்டி படங்கள் வரும்போது மோகன்லால் ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக தயாரான படத்தில் முதல் பாதியில் வரும் மம்முட்டிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், இடைவேளைக்கு பிறகு முக்கியத்துவம் இல்லாத காட்சியில் மோகன்லாலை நடிக்க வைத்து அவமதித்துவிட்டதாகவும் மோகன்லால் ரசிகர்கள் பொங்கினர். அந்த படத்தை புறக்கணிப்பதாக அறிவித்தும் பரபரப்பு ஏற்படுத்தினர். ஆனால் மம்முட்டி, மோகன்லால் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. 

இதை நிரூபிக்கும் வகையில் கொச்சியில் மம்முட்டி புதிதாக கட்டி உள்ள வீட்டுக்கு மோகன்லால் திடீரென்று சென்று அவரை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.இருவரும் பிருதிவிராஜ் இயக்கத்தில் தயாராகும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரங்கல்
நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால் மற்றும் தனுஷ் ஆகியோர் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
2. தேர்தலில் போட்டியா? நடிகர் மம்முட்டி விளக்கம்
மலையாள நடிகர் மம்முட்டி அரசியலில் குதித்து கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவின.