சினிமா செய்திகள்

டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார் + "||" + Director On Sajid Khan Actress sexual harassment

டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்

டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஹவுஸ்புல், ஹவுஸ்புல் 2, தர்னா ஸ்ருதி யெ உள்ளிட்ட இந்தி படங்களை இயக்கியவரும், நடிகருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் 2005-ம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால் அவருக்கு இந்தி நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள். இந்தி திரையுலக மாபியா வலிமையானது. நான் சாஜித் மீது பழிசுமத்தவில்லை. நடந்த உண்மையை கூறுகிறேன். என் தந்தை இறந்ததும் துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்தார்.

நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்'' என்று தெரிவித்து உள்ளார். இந்த புகார் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் செக்ஸ் புகார் கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை அதுல்யாவுக்கு டைரக்டர் எதிர்ப்பு
தமிழில் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
2. டைரக்டரான வரலட்சுமி சரத்குமார்
டைரக்டர் ஆனார் வரலட்சுமி சரத்குமார்.