சினிமா செய்திகள்

“என்னை வைத்து படம் எடுப்பது கஷ்டமா?” - சாய் பல்லவி விளக்கம் + "||" + "Is it hard to direct me in movies?" - Sai Pallavi answers

“என்னை வைத்து படம் எடுப்பது கஷ்டமா?” - சாய் பல்லவி விளக்கம்

“என்னை வைத்து படம் எடுப்பது கஷ்டமா?” - சாய் பல்லவி விளக்கம்
தன்னை வைத்து படம் எடுப்பது கஷ்டமா? என்பது குறித்து நடிகை சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் சாய்பல்லவி எல்லா விஷயங்களிலும் கறாராக இருப்பார் என்றும், அவரை வைத்து படம் எடுப்பது கஷ்டம் என்றும் திரையுலகில் பேச்சு உள்ளது. இதற்கு சாய்பல்லவி விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறும்போது, ‘நான் கதையை முழுமையாக கேட்டு விட்டு நூற்றுக்கு நூறு சதவீதம் கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால்தான் நடிக்க ஒப்புக்கொள்வேன். ஒரு படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி மட்டும் சொன்னால் திருப்தி அடைய மாட்டேன். இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் சரி முழு கதையும் என் கையில் இருக்க வேண்டும். 

முழு கதையையும் கேட்டபிறகு அதில் கதாநாயகி கதாபாத்திரத்துக்கு நான் சரியா இருப்பேனா, கதாநாயகன் பங்கு என்ன? கதை எப்படி இருக்கிறது. இதில் நடிக்கலாமா வேண்டாமா என்றெல்லாம் யோசித்து அதன்பிறகு முடிவை சொல்வேன். பிடிக்காவிட்டால் எவ்வளவு பெரிய சம்பளமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய பட நிறுவனமாக இருந்தாலும் நிராகரித்து விடுவேன். என்னை வைத்து படம் எடுக்க இவ்வளவு விஷயங்கள் இருப்பதால் இதுபோன்ற கருத்துக்கள் பரவி இருக்கலாம்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரம்ஜான் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் ஏற்கனவே திரைக்கு வருவதில் தாமதம் ஆனது.