‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா? விஜய் சேதுபதி வருத்தம்


‘துக்ளக் தர்பார் படத்தை எதிர்ப்பதா? விஜய் சேதுபதி வருத்தம்
x
தினத்தந்தி 27 Jan 2021 12:58 AM GMT (Updated: 2021-01-27T06:28:07+05:30)

விஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

விஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் பார்த்திபன் ராசிமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள காட்சிகளும், அவரது போஸ்டர்களை கிழிப்பது போன்ற காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. சீமானை கேலி செய்வதுபோல் இந்த காட்சிகள் உள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை திரையிட விடமாட்டோம் என்றும் எச்சரித்தனர்.

இது விஜய்சேதுபதிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படம் வந்தால்தான் என்ன கதை என்றே தெரியும். பிரச்சினை செய்ய வேண்டும் என்பதற்காக படம் எடுப்போமா. மக்களை ரசிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படங்கள் எடுக்கிறோம். இனிமேல் கதையை சொல்லி விட்டுத்தான் படம் எடுக்க வேண்டும். சர்ச்சைகள் எங்களுக்கு தேவை இல்லை'' என்றார். மேலும் அவர் கூறும்போது, “மாஸ்டர் படத்தினால் மீண்டும் மக்கள் தியேட்டர்களுக்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு விஜய்யே காரணம். அவரால்தான் படமும் சிறப்பாக வந்துள்ளது'' என்றார்.

Next Story