சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வரும் விஜய்யின் மாஸ்டர் + "||" + Vijay's master coming to ODT

ஓ.டி.டி.யில் வரும் விஜய்யின் மாஸ்டர்

ஓ.டி.டி.யில் வரும் விஜய்யின் மாஸ்டர்
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியிட்டனர்.
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியிட்டனர். ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டர்களில் வந்து மாஸ்டர் படத்தை பார்த்தனர். நல்ல வசூலும் ஈட்டியது. அடுத்து மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்து உள்ளனர். தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வரும். ஆனால் மாஸ்டர் 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியாவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் வந்தனர். கொரோனாவால் ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவி நடித்துள்ள பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் விஜய்யின் 65-வது பட படப்பிடிப்பு
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார்.
2. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்
நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் கசிந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
3. விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
4. சமூக வலைதளங்களில் நடிகர் விஜயின் மாஸ்டர் பட புதிய போஸ்டர்கள்
மாஸ்டர் படத்தின் புதியப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
5. மாஸ்டர் பட விவகாரம் : முதல்-அமைச்சருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் என சந்தித்து பேசினார்