சினிமா செய்திகள்

மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா + "||" + Anushka Sharma And Virat Kohli Share First Pic, Reveal Baby's Name - Vamika

மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா

மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை  வெளியிட்ட அனுஷ்கா சர்மா
நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படம் மற்றும் பெயரை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2017-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பமான அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார்.

இத்தம்பதிக்கு கடந்த மாதம் 11-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.  
இந்நிலையில், தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, அக்குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

செல்ல மகளை பார்த்து சிரித்தபடி இருக்கும் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடக்க ஆட்டக்காரர்கள் யார்? விராட் கோலி பதில்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
2. இன்ஸ்டாகிராமில் 10கோடி பாலோயர்கள் ; விராட் கோலி சாதனை
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
3. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
4. சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன விராட் கோலி: வீடியோ வைரல்
சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன இந்திய கேப்டன் விராட் கோலியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மான் கில், விராட் கோலி டக் அவுட்
இந்திய அணி உணவு இடைவேளை வரை 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.