சினிமா செய்திகள்

தனது நடிப்பை விமர்சிக்கும் சூர்யா + "||" + Surya criticizing his performance

தனது நடிப்பை விமர்சிக்கும் சூர்யா

தனது நடிப்பை விமர்சிக்கும் சூர்யா
நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது.
“நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது. சில நேரம் எனது படங்களை பார்ப்பது இல்லை. திரைக்கு வந்த பிறகு 100 நாட்கள் காத்திருந்து பார்த்த படங்களும் உண்டு. நான் நடித்த சில குறிப்பிட்ட காட்சிகளை பார்க்காமல் தவிர்த்தும் இருக்கிறேன். ஆனாலும் படத்தில் நான் செய்துள்ள தவறை மக்கள் பொறுத்து மன்னித்து ரசிப்பார்கள் என்று நினைப்பது உண்டு. எனது மனைவி நடிகையாக இருக்கிறார். சகோதரரும் நடிக்கிறார். அவர்களுக்கு தன்னம்பிக்கை உண்டு. அவர்கள் நடித்த காட்சியை விரும்புவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை எனது நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்வேன். சரியாக நடிக்கவில்லை. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று கூறிக்கொள்வேன். சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலான பிறகும் இன்னும் நான் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.''

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமிதாப்பச்சன் பாராட்டில் நெகிழ்ந்த சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்தது.
2. ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: கன்னட நடிகர் சுதீப்
சூர்யா நடித்து கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி தேர்வாகவில்லை.
3. கிரிக்கெட் வீரர் கதையில் சூர்யா?
கிரிக்கெட் வீரர்கள் தெண்டுல்கர், தோனி வாழ்க்கை கதைகள் சினிமா படங்களாக வந்துள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடப்பதாக தகவல் பரவி வருகிறது.
4. பொள்ளாச்சி சம்பவம் கதையில் சூர்யா
சூர்யா சூரரை போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 40-வது படம்.
5. 3 படங்களில் சூர்யா
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரைபோற்று படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் போட்டிக்கும் சென்று வந்தது.