சினிமா செய்திகள்

மீண்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா + "||" + SJ Surya as the villain again

மீண்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு ஸ்பைடர் படத்தில் வில்லனாக வந்தார்.
கதாநாயகர்கள் பலர் வில்லன்களாக நடிக்கின்றனர். ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் வில்லனாக வந்த விஜய் சேதுபதி சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இரும்புத்திரை இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க விஷாலிடம் பேசி வருகின்றனர். அர்ஜுன், கார்த்திக், அரவிந்தசாமி உள்ளிட்டோர் வில்லன் வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு ஸ்பைடர் படத்தில் வில்லனாக வந்தார். விஜய்யின் மெர்சல் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். சிம்புவின் மாநாடு படத்திலும் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாக்டர், அயலான் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள டான் படத்திலும் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில படங்களிலும் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. 'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாசில்?
தேர்தல் முடிந்துள்ளதால் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
2. ராசியான நடிகர், எஸ்.ஜே.சூர்யா
நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெறுவதால் எஸ்.ஜே.சூர்யா ராசியான நடிகராக கருதப்படுகிறார்.
3. இந்தி படத்தில் வில்லனாக விஷால்
தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
4. கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.
5. மீண்டும் வில்லனாக வினய்
கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர்.