தனது மூக்கு அறுவை சிகிச்சை குறித்து மனந்திறந்து உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா


தனது மூக்கு அறுவை சிகிச்சை குறித்து மனந்திறந்து உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா
x
தினத்தந்தி 10 Feb 2021 4:50 PM GMT (Updated: 10 Feb 2021 4:50 PM GMT)

தனது அனுபவம் குறித்த புத்தகத்தில் தனது மூக்கு அறுவை சிகிச்சை குறித்து மனந்திறந்து உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.

புதுடெல்லி

38 வயதான  பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்  முற்றுப்பெறாத.. என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் அதில் தனது அனுபவங்களை  பகிர்ந்து உள்ளார். தனது புத்தகத்தில் தனது மூக்கு அறுவை சிகிச்சை குறித்து மனந்திறந்து கூறி உள்ளார்.

2000 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற சிறிது நாட்களிலேயே   திரையுலகில் நுழைந்தேன். முதல் படம் தமிழில் தமிழன் . என் முதல் கதாநாயகன் விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடனான அவரது தாராள மனப்பான்மை அவர் மீது எனக்கு ஒரு  நல்ல எண்ணத்தை உருவாக்கியது.

விரைவில் ஒரு சுகாதார பின்னடைவை சந்தித்தேன்  அது "மிகவும் மோசமான சைனஸ் தொற்று"  

எனக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்தது. ஆஸ்துமா உள்ள ஒருவர் புறக்கணிக்க முடியாத பிரச்சினை இது  ஒரு மருத்துவரை அணுகினேன் என் மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார்.

எனக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். பின்னர்  கட்டுகளை அகற்ற வேண்டிய நேரம் வந்தது. என் கட்டுக்கள் அகற்றபட்ட பிறகு  என் மூக்கின் நிலை குறித்து  தெரியவந்ததும், நானும் அம்மாவும் திகிலடைந்தோம். என் அசல் மூக்கு போய்விட்டது. என் முகம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. நான் இனி நான் இல்லை என தோன்றியது.

நான் கண்ணாடியில் பார்க்கும் ஒவ்வொரு முறையும், ஒரு அந்நியனைப்போல் உணர்ந்தேன்.

ஒரு சில திரைப்படங்களில் இருந்து என்னை விலக்கினார்கள்.  அதே நேரத்தில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டேன். ஆனால் அதிர்ச்சி கேமராக்களுடன் சேர்ந்து என்னை துரத்தியது. எனக்கு ‘பிளாஸ்டிக் சோப்ரா’ என்று முத்திரை குத்தப்பட்டது. இது எனது முழு தொழில் வாழ்க்கையிலும்  என்னைப் பின்தொடர்ந்தது.

எனக்கு என ஒரு எல்லை கோட்டை வரைந்து கொண்டேன் அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மறுத்துவந்தேன்.

நான் இந்த முகத்துடன் பழக்கமாகிவிட்டேன். இப்போது நான் கண்ணாடியில் பார்க்கும்போது, ​​எனக்கு இனி ஆச்சரியமில்லை; இதை நான் சற்று வித்தியாசமாக சமாதானப்படுத்தினேன். இது என் முகம். இது என் உடல். நான் குறைபாடுடையவனாக இருக்கலாம், ஆனால் நான் நான்தான். என கூறினார்.

Next Story