சினிமா செய்திகள்

என்னை கவர்ந்த காதல் கடிதம் ராஷிகன்னா + "||" + The love letter that fascinated me was Rashikanna

என்னை கவர்ந்த காதல் கடிதம் ராஷிகன்னா

என்னை கவர்ந்த காதல் கடிதம் ராஷிகன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கன்னா தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்தார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கன்னா தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறும்போது, “நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு சீனியர் மாணவர் என்னை காதலித்தான். காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்க முயற்சிக்கும்போதெல்லாம் எப்படியோ தப்பித்து விடுவேன். ஆனாலும் ஒருநாள் பின் தொடர்ந்து வந்து தைரியமாக எனது கையில் கடிதத்தை திணித்து விட்டுபோய் விட்டான். ஒரு பூவும் கொடுத்தான். எனக்கு முதலில் இருந்தே அவனை பிடிக்கவில்லை. ஆனால் அந்த கடிதத்தில் என்னை வர்ணித்து பெருமையாக எழுதி இருந்ததை படித்ததும் சந்தோஷமாக இருந்தது. அந்த கடிதத்தை வீட்டுக்கு கொண்டு போய் அம்மாவிடம் காட்டினேன். அவரும் இந்த அளவுக்கு உன்னை யாரும் வர்ணித்து இருக்க மாட்டார்கள். இத்தனை அழகாக இருக்கிறியே. நாங்கள் கூட கவனிக்கவில்லையே. அவனை பிடித்து இருந்தால் சொல்லு’ என்றார். எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்றேன். அதன்பிறகு அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 45 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்குகிறது; பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கடிதம்
மத்திய அரசு மேலும் 45 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி வாங்குகிறது. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
2. கவர்னரை நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும், அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்துவருகிறது.
3. புதிய நாடாளுமன்ற திட்டம் வீணானது: பிரதமருக்கு அதிருப்தி கடிதம் எழுதிய 69 முன்னாள் அதிகாரிகள்
புதிய நாடாளுமன்ற திட்டம் வீணானது மற்றும் தேவையற்றது என பிரதமருக்கு முன்னாள் அதிகாரிகள் 69 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.