சினிமா செய்திகள்

மலையாள பட ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + Aishwarya Rajesh in Malayalam movie remake

மலையாள பட ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாள பட ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாளத்தில் தயாரான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
மலையாளத்தில் தயாரான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ஜியோ பேபி இயக்கிய இந்த படத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் ஆகியோர் நடித்துள்ளனர். படித்த பெண் பழமைவாத சிந்தனையில் இருக்கும் குடும்பத்துக்கு மருமகளாகி ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி அவதிப்படும் கதையம்சத்தில் எடுத்துள்ளனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க போட்டி நடந்தது. இந்த நிலையில் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் வாங்கி இருக்கிறார். இதில் நிமிஷா கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேசே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.