சினிமா செய்திகள்

வருகிற ஏப்ரல் மாதம் ஜெயலலிதா வாழ்க்கை படம் வெளியாகிறது + "||" + This coming April Jayalalithaa life film Is released

வருகிற ஏப்ரல் மாதம் ஜெயலலிதா வாழ்க்கை படம் வெளியாகிறது

வருகிற ஏப்ரல் மாதம் ஜெயலலிதா வாழ்க்கை படம் வெளியாகிறது
ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி வருகிறார். விஜய் இயக்கி உள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி வருகிறார். விஜய் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து சமீபத்தில் முடிந்தது.

இந்த படத்தில் நடித்தது குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, “நடுத்தர குடும்பத்தில் இருந்து 16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று எனக்கும், ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத கதாபாத்திரம் எனக்கு ரத்தமும், சதையுமாக கிடைத்தது. கதாபாத்திரத்தை மிகவும் நேசித்தேன். ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆவதுவரை உள்ள காட்சிகள் படத்தில் இருக்கும்'' என்றார். கங்கனா ரணாவத், அரவிந்தசாமி தோற்றங்கள் ஏற்கனவே வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் தலைவி படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். தலைவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.