கொரோனாவால் தாமதமான மோகன்லால் சரித்திர படம் மே மாதம் ரிலீஸ்


கொரோனாவால் தாமதமான மோகன்லால் சரித்திர படம் மே மாதம் ரிலீஸ்
x
தினத்தந்தி 2 March 2021 4:58 PM GMT (Updated: 2 March 2021 4:58 PM GMT)

மோகன்லால் சரித்திர கதையம்சம் கொண்ட மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பே முடிந்து கடந்த வருடம் மார்ச் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் ஊரடங்கால் முடங்கியது. நீண்ட தாமதத்துக்கு பிறகு வருகிற மே மாதம் இரண்டாவது வாரத்தில் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்து உள்ளனர். 

அதிக பொருட் செலவில் தயாராகி உள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், சுனில் ஷெட்டி, சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியா வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் வாழ்க்கை கதையாக இந்த படம் தயாராகி உள்ளது. குஞ்சலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்து இருக்கிறார்.

Next Story