சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் விபத்து நடிகர் பகத் பாசிலுக்கு காயம் + "||" + Actor Fahadh Faasil injured during film-shoot...

படப்பிடிப்பில் விபத்து நடிகர் பகத் பாசிலுக்கு காயம்

படப்பிடிப்பில் விபத்து நடிகர் பகத் பாசிலுக்கு காயம்
'மலையன் குஞ்சு' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பகத் பாசிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கொச்சி

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவருடைய நடிப்பில் 'மாலிக்', 'ஜோஜி', 'பாட்டு', 'மலையன் குஞ்சு' உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'மாலிக்' திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 'மலையன் குஞ்சு' படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அதற்காக கட்டைடம் ஒன்றின் மேல் இருந்து  குதிப்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது கால் இடறி கீழே விழுந்ததில் பகத் பாசிலுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்துள்ளனர். அவரது மூக்கில் காயம் ஏற்பட்டு உள்ளது. பின்பு, ஒரு வாரம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 'மலையன் குஞ்சு' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

'மலையன் குஞ்சு' படத்தை பகத் பாசில் தந்தை டைரக்டர் பாசில் தயாரித்து வருகிறார். சஜிமோன் பிரபாகரன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு மகேஷ் நாராயணன் கதை எழுதி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
2. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை
3. டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
4. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.
5. விடைபெற்றார் விவேக்: நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்
நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.