சினிமா செய்திகள்

ரசிகர்கள் ஆதரவால் பூர்ணா மகிழ்ச்சி + "||" + Full delight with the support of the fans

ரசிகர்கள் ஆதரவால் பூர்ணா மகிழ்ச்சி

ரசிகர்கள் ஆதரவால் பூர்ணா மகிழ்ச்சி
நடிகை பூர்ணாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உள்ளது.
நடிகை பூர்ணாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதையொட்டி வலைத்தளத்தில் பூர்ணா வெளியிட்டுள்ள பதிவில், “என்னை சமூக வலைத்தள பக்கத்தில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு என்னை மேலும் கடினமாக உழைக்க தூண்டுகிறது. என்னை உற்சாகப்படுத்தி ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள்தான் எனது பலம். அர்ப்பணிப்போடு தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். பூர்ணாவை சமீபத்தில் திருமண மோசடி கும்பல் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் படம் பேசும், அம்மாயி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்திலும் நடித்துள்ளார். நான்கு தெலுங்கு படங்கள், ஒரு மலையாள படம், ஒரு கன்னட படமும் கைவசம் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தல் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு ‘டாஸ்மாக்’ கடைகள் திறப்பு மதுபிரியர்கள் மகிழ்ச்சி
சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2. வங்காளதேச சகோதர சகோதரிகளுக்கு மேட் இன் இந்தியா தடுப்பூசி: பிரதமர் மோடி மகிழ்ச்சி
வங்காளதேச சகோதர சகோதரிகள் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளை பயன்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
3. கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை ஆல் பாஸ்; மாணவர்கள் மகிழ்ச்சி
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுகின்றனர் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
4. ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு; பஸ் போக்குவரத்து தொடக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி
ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு 2 மாதத்துக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5. பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பெண் விவசாயி பாப்பம்மாள் தனது பேட்டியில் கூறியுள்ளார்.