சினிமா செய்திகள்

ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்துக்கு மிரட்டல் + "||" + Intimidation for Sreedthi Life film

ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்துக்கு மிரட்டல்

ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்துக்கு மிரட்டல்
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஶ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஶ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சினைகளை மையப்படுத்தி உண்மை சம்பவங்களுடன் படத்தை எடுக்கின்றனர். ராஜாங்கம் டைரக்டு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரான இவர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதில் ஶ்ரீரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த நிலையில் ஶ்ரீரெட்டி படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து படக்குழுவினருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன் கூறும்போது, “ரெட்டி டைரி படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று போனில் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். டைரி என்ற பெயரில் இன்னொரு படம் தயாராவதாக தகவல் வந்துள்ளது. டைரி பெயர் உரிமை எங்களிடம் இருப்பதால் அந்த பெயரை வேறு படத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு கொலை மிரட்டல்
சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.
2. சென்னையில் தலைமைச்செயலகம், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் தலைமைச்செயலகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரெயில்வே முன்னாள் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. சென்னையில் தலைமைச்செயலகம், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் தலைமைச்செயலகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரெயில்வே முன்னாள் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க, அமெரிக்காவில் படிக்கும் சென்னை மாணவியிடம், ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
5. ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் ஆணழகன் பட்டம் வென்றவர் கைது
திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆணழகன் பட்டம் வென்றவர் கைது செய்யப்பட்டார்.