சினிமா செய்திகள்

வருமான வரித்துறை சோதனையால் அச்சமா? நடிகை டாப்சி விளக்கம் + "||" + Afraid of an income tax audit? Actress Topsy Description

வருமான வரித்துறை சோதனையால் அச்சமா? நடிகை டாப்சி விளக்கம்

வருமான வரித்துறை சோதனையால் அச்சமா? நடிகை டாப்சி விளக்கம்
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்சி மற்றும் இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்சி மற்றும் இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் இந்த சோதனை நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. சோதனையில் ரூ.650 கோடிக்கு மேல் வருமான வரி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக விமர்சனங்களும் கிளம்பின. நடிகை கங்கனா ரணாவத்தும் டாப்சியை கேலி செய்து இருந்தார். இந்த சோதனை குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், “நான் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறேன். அந்த கண்ணோட்டத்திலேயே மக்களும் என்னை பார்க்கிறார்கள். எனது அலமாரியில் எலும்பு கூடுகள் இல்லை. நான் நேர்மையாக இருக்கிறேன். அதுவே எனக்கு அச்சம் இல்லாமல் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுக்கிறது. பொய் சொல்ல என்னால் முடியாது. யாராவது என்னை குறிவைத்து தாக்கினால் அதே பாணியில் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கமாட்டேன். அமைதியாக எளிமையாக வாழ விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ பற்றி விளக்கம் சொன்ன வனிதா
‘ஒருவனுக்கு ஒருத்தி’ பற்றி விளக்கம் சொன்ன வனிதா.
2. கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்
கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்.
3. ரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா? சல்மான்கான் விளக்கம்
ரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா? சல்மான்கான் விளக்கம்.
4. நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா? சசிகலா விளக்கம்
நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினேனா? என்பது குறித்து சசிகலா பதில் அளித்துள்ளார்.
5. மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.