சினிமா செய்திகள்

பெரிய நடிகர் மீது நடிகை பாலியல் புகார் + "||" + Actress sexual harassment complaint against big actor

பெரிய நடிகர் மீது நடிகை பாலியல் புகார்

பெரிய நடிகர் மீது நடிகை பாலியல் புகார்
பட வாய்ப்பு தர படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் தொடர்ந்து மீ டூ வில் புகார் சொல்லி வருகிறார்கள்.
பட வாய்ப்பு தர படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் தொடர்ந்து மீ டூ வில் புகார் சொல்லி வருகிறார்கள். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், திருட்டுப்பயலே 2, இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு தனக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டு உள்ளது என்றும், விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்றும் ஏற்கனவே புகார் கூறி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்போது மீண்டும் மீ டூ புகார் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஷாலு ஷம்மு தற்போது வெளியிட்டுள்ள பதிவில், “பெரிய நடிகர் படத்தில் நடிக்க சமரசமாக வேண்டும். தவறினால் நடிகையின் திறமை நிராகரிக்கப்படும். எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்'' என்று குறிப்பிட்டு உள்ளார். ஷாலு ஷம்மு பெரிய நடிகர் என்று குறிப்பிட்டு இருப்பதால் அது எந்த நடிகர் என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம் - போலீசில் புகார்
பிரபல நடிகையாக இருக்கும் சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
2. கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி கமிஷனர்
ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. ‘அன்பு செல்வன்’ படக்குழு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படம் தயாராகி வருகிறது, இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.
4. ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
இணைய தளங்களில் தன்னை பற்றிய ஆபாசபடங்களை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
5. வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்
தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா.