சினிமா செய்திகள்

அஜித்குமாரின் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி: தயாரிப்பாளர் அறிவிப்பு + "||" + Ajith Kumar's Valimai First Look Poster Release Date: Update by Producer

அஜித்குமாரின் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி: தயாரிப்பாளர் அறிவிப்பு

அஜித்குமாரின் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி: தயாரிப்பாளர் அறிவிப்பு
அஜித்குமாரின் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை, 

நேர் கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் அஜித்குமார் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

வலிமை படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முடியும் தருவாயில் உள்ள 'வலிமை' படத்தில் யாரெல்லாம் அஜித்குமாருடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட்டுக்காக பல்வேறு வழிகளில் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக 'வலிமை' அப்டேட் குறித்த தகவலைப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விளம்பரங்களும் வெளியாகும்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலால் அஜித்தின் வலிமை படக்குழு புது முடிவு
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
2. ‘ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள்' - ராகுல் காந்தி
ஆண்களைவிட வலிமையானவர்களான பெண்கள், அதை புரிந்துகொள்ளாததால் ஆண்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார்.
3. உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.
4. கொரோனா அச்சம்: அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பில் மாற்றம்
கொரோனா அச்சம் காரணமாக அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.