சினிமா செய்திகள்

நடனத்தை விட நடிப்பில் பெயர் வாங்க விரும்பும் சாய் பல்லவி + "||" + Sai Pallavi who wants to make a name for himself in acting rather than dance

நடனத்தை விட நடிப்பில் பெயர் வாங்க விரும்பும் சாய் பல்லவி

நடனத்தை விட நடிப்பில் பெயர் வாங்க விரும்பும் சாய் பல்லவி
நடிகை என்பதை தாண்டி சாய்பல்லவியின் நடனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. திறமையான நடன கலைஞர் என்று பெயர் வாங்கி இருக்கிறார்.
நடிகை என்பதை தாண்டி சாய்பல்லவியின் நடனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. திறமையான நடன கலைஞர் என்று பெயர் வாங்கி இருக்கிறார். ரவுடி பேபி பாடலில் சாய்பல்லவி ஆடிய நடனம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த நடன கலைஞர் என்பது உங்களுக்கு மகிழ்ச்சிதானே என்று சாய்பல்லவியிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறும்போது, நான் நடன கலைஞராக அடையாளம் காணப்படுவதை விரும்பவில்லை. மிக சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை. மற்றதெல்லாம் சிறிய விஷயங்கள். நடனம் அழகாக இருந்தது என்றால் அது எனது ஒருத்தியோட திறமை மட்டும் இல்லை. அதை சுற்றி நிறைய பேரின் கஷ்டம் இருக்கிறது. நடனம் என்றால் நான் மட்டும் கிடையாது. நல்ல பாடல் அமைய வேண்டும். கதைக்கு ஏற்றமாதிரி அந்த பாடல் இருக்க வேண்டும். டான்ஸ் மாஸ்டர் நல்ல அரங்கு அமைக்க வேண்டும். இது எல்லாம் சேர்ந்து வர வேண்டும். ஆனால் நடிப்பு என்றால் நான் மட்டும்தான் இருப்பேன். அதுதான் எனது சுயநலம். அதற்காகத்தான் சொல்கிறேன் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். பல வருடங்களுக்கு பிறகும் சாய்பல்லவி என்றால் எனது நடிப்புதான் ரசிகர்கள் நினைவுக்கு வரவேண்டும்'' என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் தனுசுக்கு ஜோடி சாய் பல்லவி
தனுசுக்கு இந்தியில் அந்த்ராங்கி ரே, ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஆகியவை கைவசம் உள்ளன.