தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்கு சாவடியில் கமல்ஹாசன் குடும்பத்துடன் வாக்களித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை உள்ள வாக்குச்சாவடிக்கு 7.15 மணிக்கு வந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் ஆகியோர் வந்தனர்.
பின்னர் அவர்கள் வாக்கு சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும் அவரது குடும்பத்தினரும் வெளியே வந்தனர். அப்போது கமல்ஹாசனை ரசிகர்களும், பொதுமக்களும் சூழ்ந்துகொண்டனர்.
வேட்பாளர்
மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா உள்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தல் தனக்கும், தன்னுடைய கட்சியினருக்கும் புதிய அனுபவம் என்றும், மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.