சினிமா செய்திகள்

பெரிய நடிகர்களுக்கு எதிராக லாவண்யா + "||" + Lavanya against great actors

பெரிய நடிகர்களுக்கு எதிராக லாவண்யா

பெரிய நடிகர்களுக்கு எதிராக லாவண்யா
சசிகுமார் ஜோடியாக பிரம்மன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சசிகுமார் ஜோடியாக பிரம்மன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். லாவண்யா திரிபாதி பெரிய நடிகர்களை குறைவாக மதிப்பீடு செய்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பெரிய கதாநாயகர்களுடன் நடிப்பதால் மட்டும் நடிகைகளுக்கு பெயர் வந்துவிடாது. சினிமா துறை கதாநாயகர்களை சுற்றியே இருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து உள்ள கதாநாயர்கள் படங்களில் நடித்தால்தான் கதாநாயகிகளுக்கு பெயர் கிடைக்கும். அதனால்தான் கதாநாயகிகள் பலரும் கதாநாயகர்கள் பெயரையே உச்சரிக்கிறார்கள் என்று பேசுகிறார்கள். நான் இதனை மறுக்கிறேன். கதாநாயகர்கள் கையில் எதுவுமே இல்லை. படங்களின் தகுதி இயக்குனர்கள் கையில் உள்ளது. புதிய புதிய கதாபாத்திரங்களை அவர்கள்தான் எழுதுகிறார்கள். திறமையான டைரக்டர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றுதான் நான் கனவு காண்கிறேன். பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்தது இல்லை. ஆனால் முக்கிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க விரும்புவேன். அப்படிப்பட்ட நிறைய இயக்குனர்கள் பட்டியல் என்னிடம் இருக்கிறது. நடிகராக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் அவர்களுக்கு பெயர் கிடைப்பது இயக்குனர்கள் கையில்தான் இருக்கிறது. பெரிய கதாநாயகன் படத்தில் நடிப்பதால் நாயகிக்கு பெயர் வந்துவிடாது. இயக்குனர்களால்தான் அது முடியும்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. திரிபுராவில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் பேரணி
திரிபுராவில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பேரணி நடத்துகிறது.