சினிமா செய்திகள்

நடிகை நக்மா- இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரோனாவால் பாதிப்பு + "||" + Actress Nagma- Director SP Muthuraman Corona affected

நடிகை நக்மா- இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரோனாவால் பாதிப்பு

நடிகை நக்மா- இயக்குனர்  எஸ்.பி.முத்துராமன் கொரோனாவால் பாதிப்பு
நடிகை நக்மா- இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், அலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பழம்பெரும் இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 67-வது தேசிய திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல் ;7 விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்!
2019 ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது.
2. வரும் 25ம் தேதிஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்
வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
3. கிரிக்கெட் வீரர் பும்ரா- நடிகை அனுபமா திருமணம் ; அனுபமாவின் தாயார் மறுப்பு 'வதந்திகளை வேடிக்கை பார்க்கிறோம்'
கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.
4. படப்பிடிப்பில் விபத்து நடிகர் பகத் பாசிலுக்கு காயம்
'மலையன் குஞ்சு' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பகத் பாசிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
5. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் டாப்ஸி ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.