சினிமா செய்திகள்

அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை + "||" + Tamil Nadu rights of Ajith film sold for Rs 60 crore

அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை

அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை
அஜித்குமார் நடிக்கும் ‘வலிமை’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே எல்லா ஏரியாக்களின் வினியோக உரிமையும் விற்பனையாகி வருகிறது. இதன் தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ. 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்குமார் நடிக்கும் ‘வலிமை’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே எல்லா ஏரியாக்களின் வினியோக உரிமையும் விற்பனையாகி வருகிறது. இதன் தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ. 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஆகிய இருவரும் வாங்கியிருக்கிறார்கள்.

ரூ.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ.20 கோடி லாபம் வைத்து ரூ. 80 கோடிக்கு விற்க இருப்பதாக பேசப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு சண்டை காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அவர், ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டார். அவர் நடிக்க இருக்கும் ஒரே ஒரு சண்டை காட்சியை ஏதாவது ஒரு வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக எம்.பி.க்கள் இல்லாமல் நிறைவேறிய மசோதா
நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் பட்டியலினத்திலுள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாரி ஆகிய சாதிகளை உள்ளடக்கி, “தேவேந்திர குல வேளாளர்” என்ற ஒரே பெயரில் பொது பெயரிட கோரி அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: வெற்றியோடு வெளியேறியது தமிழக அணி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி கடைசி லீக்கில் விதர்பாவை தோற்கடித்த போதிலும் அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியாமல் வெளியேறியது.