சினிமா செய்திகள்

முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi in controversy for not wearing a mask

முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி

முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை விஜய்சேதுபதி மீறி விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் சிறப்பு காட்சி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்காக சென்னையில் உள்ள தியேட்டரில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த விஜய்சேதுபதி படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் கையை பிடித்தபடி படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார். அவரை கட்டிப்பிடித்து கைகளை முத்தமிடவும் செய்தார். அப்போது விஜய்சேதுபதி முககவசம் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய்சேதுபதி முககவசம் அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொரோனா விதிமுறைகளை மீறி இருக்கிறார். விஜய்சேதுபதியே இப்படி செய்யலாமா? உங்களை பார்த்து ரசிகர்களும் இப்படித்தானே செய்வார்கள் என்று கண்டித்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. "தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது; முதல் முறை விருது வாங்குகிறேன்" - நடிகர் விஜய் சேதுபதி
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வாங்குகிறார்.
2. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்துக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் சேதுபதி படம்
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு
விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘லாபம்’ படத்தை மறைந்த டைரக்டர் ஜனநாதன் இயக்கியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.
4. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்
விஜய்சேதுபதி, நந்திதா ஜோடியாக நடித்து 2012-ல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பெரிய வெற்றி பெற்றது. முழு நீள நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது.
5. விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா?
தேசிய அளவில் பிரபலமாகி இருக்கும் டைரக்டர் வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.