சினிமா செய்திகள்

கொரோனா தொற்று தடுப்பூசி போட்டதால் பெரிய பாதிப்பு இல்லை -நடிகர் செந்தில் + "||" + Vaccination against corona infection does not cause major harm -Actor Senthil

கொரோனா தொற்று தடுப்பூசி போட்டதால் பெரிய பாதிப்பு இல்லை -நடிகர் செந்தில்

கொரோனா தொற்று தடுப்பூசி போட்டதால் பெரிய பாதிப்பு இல்லை -நடிகர் செந்தில்
கொரோனா தொற்று தடுப்பூசி போட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என்று நடிகர் செந்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செந்தில் பிரசாரம் செய்தார். பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செந்திலின் மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 

கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் செந்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, ‘'எனக்கு கொரோனா வந்தது உண்மைதான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவை இல்லை. பரிசோதனை செய்து கொண்டு வீட்டில் நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். டாக்டர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள். எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் பெரிய அளவு பாதிக்கவில்லை. 

அதே மாதிரி நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உடம்புக்கு நல்லது. அடுத்த பரிசோதனைக்கு வர சொல்லி இருக்கிறார்கள். கொரோனா தொற்று இல்லை என்று வந்தால் வீட்டில் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள சொன்னார்கள். பயப்பட தேவை இல்லை. வாழ்க வளமுடன்'' என்று கூறியுள்ளார்.