சினிமாவுக்கு என்றும் அழிவே கிடையாது - நடிகர் சசிகுமார்


சினிமாவுக்கு என்றும் அழிவே கிடையாது - நடிகர் சசிகுமார்
x
தினத்தந்தி 16 April 2021 11:00 PM GMT (Updated: 16 April 2021 7:59 PM GMT)

கொரோனாவால் திரைப்படத்துறை பாதிக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்தும் குறைந்துள்ளது. இந்த சிக்கல்களை தாண்டி சினிமா ஜெயிக்கும் என்று நடிகர் சசிகுமார் கூறினார்.

எம்.ஜி.ஆர். மகன் இசை விழா நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர் சசிகுமார் பேசும்போது, “தியேட்டரில் முக கவசம் அணிந்து எச்சரிக்கையோடு படங்களை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்துறைக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. அதையெல்லாம் தாண்டி சினிமா என்றைக்கும் ஜெயிக்கும். சினிமாவுக்கு எப்போதுமே அழிவு கிடையாது. என்றென்றும் திரையுலகம் நிலைத்து இருக்கும். எத்தனை விஷயங்கள் இருந்தாலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதற்கும் அழிவு கிடையாது. பிரச்சினைகளை மீறி சினிமா டூரிங் டாக்கீஸ் காலத்தில் இருந்து இன்றைக்கும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. சினிமாவுக்கு அழிவே கிடையாது'' என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “நானும், சமுத்திரக்கனியும் நடித்துள்ள எம்.ஜி.ஆர். மகன் படத்தில் எனது பெயருக்கு பின்னால் சத்யராஜ் பெயரை போட்டது வருத்தமாக இருந்தது. அவர் பெரிய நடிகர் மூத்தவர். எனவே அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் முதலாவது அவரது பெயரையும், இரண்டாவது எனது பெயரையும் போடும்படி இயக்குனர் பொன்ராமிடம் கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று பெயரை மாற்றியதற்கு நன்றி'' என்றார்.

Next Story