சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வெளியாகும் புதிய படங்கள் + "||" + New Films released on OTT

ஓ.டி.டி.யில் வெளியாகும் புதிய படங்கள்

ஓ.டி.டி.யில் வெளியாகும் புதிய படங்கள்
கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது.
இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஓ.டி.டி.யில் வெளியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. பீட்சா 3-ம் பாகம் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து 2012-ல் வெளியான பீட்சா படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் 2013-ல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக பீட்சா 3-ம் பாகம் தயாராகி உள்ளது. இந்த படத்தை மோகன் கோவிந்த் இயக்கி உள்ளார். அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்திலும், பவித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி ஆகிய படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சொந்தமாக தியேட்டர் திறந்த நடிகர்
நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பதோடு சொந்தமாகவும் தொழில் செய்கிறார்கள். ரியல் எஸ்டேட்டில் பல நடிகர்கள் முதலீடு செய்துள்ளனர்.