சினிமா செய்திகள்

கோடை வெயிலில் தப்பிக்க ரகுல் பிரீத் சிங் யோசனை + "||" + Ragul Preet Singh's idea to escape the summer sun

கோடை வெயிலில் தப்பிக்க ரகுல் பிரீத் சிங் யோசனை

கோடை வெயிலில் தப்பிக்க ரகுல் பிரீத் சிங் யோசனை
கோடை வெயிலில் தப்பிக்க ரகுல் பிரீத் சிங் யோசனை.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனா முன்எச்சரிக்கை பாதுகாப்புடன் இருந்தால் தொற்று வராது என்று பலரும் சொல்லி விட்டார்கள். ஆனால் இப்போது பயங்கரமான கோடை காலம். வெயில் வறுத்து எடுக்கிறது. அனலை தாங்க மோர், இளநீர், கரும்பு ஜூஸ், எலுமிச்சை சாறு என்று குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் சரிதான்.

ஆனால் நான் ஒரு வைத்தியம் சொல்கிறேன். இந்த கோடை வெப்பத்தில் இருந்து உடலை குளிர்ச்சி அடைய செய்ய பார்லியை வேக வைத்து அந்த தண்ணீரை குடியுங்கள். குளிர்ச்சியாக இருக்கும். இதனை ஊட்டச்சத்து நிபுணர் எனக்கு சொன்னார்.

கோடையினால் வரும் ஆரோக்கிய பிரச்சினைகள், ஜீரண கோளாறு போன்ற எல்லாவற்றிலும் இருந்து விடுபடலாம். யோகா, உடற்பயிற்சிகள் செய்தாலும் ஆரோக்கியமான உணவு முக்கியம்.

சினிமாவில் சவாலான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். இந்தி படமொன்றில் கனரக வாகனம் ஓட்டி நடித்தேன். ஆரம்பத்தில் பதற்றமாக இருந்தது. பிறகு தைரியமாக ஓட்டினேன். அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள். இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் உள்ளது.

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை
உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை.
2. ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறலாம்: நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு
24-ந்தேதி ஒலிபரப்பாகும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறுவதற்கு, நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
3. உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு
சமந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு உறுதியோடு இருங்கள் என ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு அளித்து உள்ளனர்.
4. மோசடிகளை தடுக்க இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சமாளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.