சினிமா செய்திகள்

எனக்கு கொலை மிரட்டல் வருகிறது -நடிகர் சித்தார்த் + "||" + I am getting death threats -Actor Siddharth

எனக்கு கொலை மிரட்டல் வருகிறது -நடிகர் சித்தார்த்

எனக்கு கொலை மிரட்டல் வருகிறது -நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த் வலைத்தள பக்கத்தில் சமூக, அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
நடிகர் சித்தார்த் வலைத்தள பக்கத்தில் சமூக, அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை கண்டிக்கும் வகையில் பா.ஜனதாவையும் விமர்சித்து பதிவுகள் வெளியிடுகிறார்.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் இலவச தடுப்பூசி போடப்படும் என்ற பதிவுக்கு பதிலடியாக பா.ஜனதா அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும்போதுதான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம் என்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என்று பொய் சொன்னால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்குள்ள பா.ஜனதா முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சொன்ன கருத்தை விமர்சித்து துறவியோ, தலைவரோ யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் அறைவிழும் என்றார்.

சித்தார்த் கருத்துக்கள் பா.ஜனதா கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது போன் நம்பரை தமிழக பா.ஜனதா கட்சியினர் வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல். பாலியல் மிரட்டல்கள் விடுத்துள்ளனர். அவர்கள் போனில் பேசியதை பதிவு செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளேன். நான் பேசுவதை நிறுத்த போவதில்லை'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை
கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
2. ஜம்மு-காஷ்மீர்: போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி; விசாரணைக்கு கவர்னர் உத்தரவு!
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
3. கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை - டிரைவர் கைது....!
சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டி கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை தம்பதிகள் கைது
ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.
5. வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வீட்டில் புதைத்துவிட்டு மாயமான தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்