சினிமா செய்திகள்

தயாரிப்பாளரான கங்கனா ரணாவத் + "||" + Producer Kangana Ranaut

தயாரிப்பாளரான கங்கனா ரணாவத்

தயாரிப்பாளரான கங்கனா ரணாவத்
தமிழில் தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். ஜான்சி ராணி வாழ்க்கை கதையான மணிகர்னிகா என்ற சரித்திர கதையில் நடித்து இருந்தார். தேசிய விருது பெற்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கங்கனா அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். மணிகர்னிகா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக டிக்கு வெட்ஸ் ஷெரு என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். இது நகைச்சுவை படமாக உருவாகிறது.

இந்த படம் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியாகிறது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரிப்பதுடன் புதிய கலைஞர்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘தலைவி' படத்தை தடுப்பதா? கங்கனா ரணாவத் கோபம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி நடித்து உள்ளனர்.
2. சீதை வேடத்தில் கங்கனா ரணாவத்
சீதை வேடத்தில் கங்கனா ரணாவத்.
3. பொற்கோவிலில் கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் சமூக, அரசியல் கருத்துகளை துணிச்சலாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.