சினிமா செய்திகள்

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு! + "||" + Jr NTR tests positive for Covid-19, says he is in isolation with his family

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு!
கொரோனா தொற்றுப் பரிசோதனையில் தனக்குத் தொற்று உறுதியாகியிருப்பதாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். டுவீட் செய்துள்ளார்.
ஐதராபாத் 

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பல நடிகைகள், நடிகர்கள் கடந்த வாரங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில், வீட்டுத் தனிமையில் உள்ளனர். இந்த நிலையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜூனியர் என்.டி.ஆர் னது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தயவுசெய்து கவலை வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என் குடும்பத்தினரும், நானும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டோம். மருத்துவர்களின் கண்காணிப்பில் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். கடந்த சில நாட்கள் என்னுடன் நேரடித் தொடர்பில் வந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்தம் ரணம் ரவுத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். அவரோடு சேர்ந்து \ ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. மேகாலயா முதல்-மந்திரிக்கு மீண்டும் கொரோனா
மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.