அமெரிக்காவில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு ; ரசிகர்கள் ஆரவாரம்


அமெரிக்காவில் மீண்டும் திரையரங்குகள்  திறப்பு ; ரசிகர்கள்  ஆரவாரம்
x
தினத்தந்தி 20 May 2021 11:32 AM GMT (Updated: 20 May 2021 11:32 AM GMT)

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொரோனாவால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 14 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ்

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு காரணமாக ஹாலிவுட் எனப்படும் சினிமா தொழில் பெரும் பாதிப்பை சந்தித்தது. 2020ல் மார்ச், ஏப்ரல் மாதம் முதல் அனைத்து மாகாணங்களிலும் திரையரங்குகள் அடுத்தடுத்து மூடப்பட்டன. 

இந்நிலையில் ஹாலிவுட் இயங்கும் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனை ஒரு விழாவாக கொண்டாடிய திரைத்துறையினர்,  'மீண்டும் பெரிய திரை' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் ரிலீசுக்கு தயாரான தி ப்ரோடேஜ்  படத்தின் டிரைலர் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வேர் போல்ஸ் வித் இன் திரைப்படத்தின் டிரைலர்  திரையிடப்பட்டது. ஹாலர் திரைப்படத்தின் டிரைலரும்  திரையிடப்பட்டது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இன் தி ஹெயிட்ஸ், டிஸ்னி கிரியெல்லா, ஸ்நேக் ஐஸ் உள்ளிட்ட திரைப்பட டிரைலைர்களும் திரையிடப்பட்டன. 

Next Story