சினிமா செய்திகள்

தெலுங்கில் ரீமேக்காகும் அஜித்தின் 2 படங்கள் + "||" + Ajith's 2 films to be remake in Telugu

தெலுங்கில் ரீமேக்காகும் அஜித்தின் 2 படங்கள்

தெலுங்கில் ரீமேக்காகும் அஜித்தின் 2 படங்கள்
அஜித்குமார் நடித்த வேதாளம், என்னை அறிந்தால் ஆகிய 2 படங்களையும் தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.
இந்த படங்களின் தெலுங்கு பதிப்புகளில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். என்னை அறிந்தால் படம் கவுதம் மேனன் இயக்கத்தில் 2015 பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து வசூல் குவித்தது. இதில் அஜித்துடன் அருண் விஜய், திரிஷா, அனுஷ்கா ஆகியோரும் நடித்து இருந்தனர்.என்னை அறிந்தால் தெலுங்கு ரீமேக்கை சுஜித் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான சாஹோ படத்தை சுஜித் இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுஜித்தை சிரஞ்சீவி அழைத்து என்னை அறிந்தால் படத்தின் கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும் அதற்காக திரைக்கதையை மாற்றி எழுதும் பணியில் சுஜித் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் முதலில் பவன் கல்யாண் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக சிரஞ்சீவி நடிக்க உள்ளார். சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு வேதாளம், என்னை அறிந்தால் படங்களில் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் வலிமை தீபாவளிக்கு ரிலீஸ்?
அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
2. சினிமாவில் 30 ஆண்டுகள்; வாழுங்கள், வாழ விடுங்கள் நடிகர் அஜித்குமார் அறிக்கை
சினிமாவில் 30 ஆண்டுகள்; வாழுங்கள், வாழ விடுங்கள் நடிகர் அஜித்குமார் அறிக்கை.