விக்ரம் பட நடிகை 2-வது திருமணம்?

விக்ரம் பட நடிகை 2-வது திருமணம்?
x
தினத்தந்தி 4 Jun 2021 1:00 AM GMT (Updated: 2021-06-04T06:30:39+05:30)

தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரேமா, பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தெலுங்கில் 28-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த பிரின்ஸ் படம் பெரிய வெற்றி பெற்றது. சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு விருது பெற்றுள்ளார். பிரேமா 2006-ல் ஜீவன் அப்பாச்சு என்ற என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பிரேமாவுக்கு தற்போது 44 வயது ஆகிறது. இந்த நிலையில் பிரேமா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும் மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால் பிரேமா இதனை உறுதிப்படுத்தவில்லை.

Next Story