நடிகை ரிச்சாவுக்கு ஆண் குழந்தை


நடிகை ரிச்சாவுக்கு ஆண் குழந்தை
x
தினத்தந்தி 6 Jun 2021 11:48 PM GMT (Updated: 2021-06-07T05:18:14+05:30)

நடிகை ரிச்சாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய. தொடந்து சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்திலும் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரிச்சா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு லூகா ஷான் லாங்கெல்லா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிச்சா வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘எனக்கு குழந்தை பிறந்ததன் மூலம் வாழ்க்கையில் பெரிய சந்தோஷம் ஏற்பட்டு உள்ளது. குழந்தை பார்க்க அவனது தந்தை போலவே இருக்கிறான். எனது கணவர் பிரசவ காலத்தில் நம்பிக்கை அளித்து உற்சாகப்படுத்தினார். அவர் எனது குழந்தைக்கு சிறந்த தந்தை’ என்று கூறியுள்ளார். ரிச்சாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story