சினிமா செய்திகள்

சமந்தாவுக்கு அதிக சம்பளம் + "||" + Higher salary for Samantha

சமந்தாவுக்கு அதிக சம்பளம்

சமந்தாவுக்கு அதிக சம்பளம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.

சமந்தா நடித்துள்ள பேமிலிமேன்-2 என்ற வெப் தொடர் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் அவர் ஏற்றுள்ள போராளி கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தாவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின.


இந்த தொடரில் நடிக்க சமந்தா அதிக சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க அவருக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் வெப் தொடரில் நடிக்க சமந்தா ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் பரவி வருகிறது.

திரைப்படங்களை விட வெப் தொடருக்கு சமந்தா அதிக சம்பளம் வாங்கியது திரையுலகினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படங்களுக்கு இதே சம்பளத்தை வாங்க முடிவு செய்துள்ளார். தொடரில் நடித்துள்ள பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விவாகரத்து வதந்திக்கு சமந்தா விளக்கம்
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
2. வடிவேல் சம்பளம் ரூ.10 கோடி?
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட சர்ச்சையால் பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேல் இப்போது தடை நீங்கியதால் மீண்டும் நடிக்க வருகிறார்.
3. சமந்தா என்றாலே சர்ச்சைதான்!
சமந்தா என்றாலே சர்ச்சைதான் என்றாகி விட்டது. கொரியன் வெப் தொடர் ஒன்று ‘ரீமேக்’ செய்யப்படுகிறது. அதில் சமந்தா ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.
4. இணையதள படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்
இணையதள படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்.
5. சமந்தா பற்றி வதந்திகள்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.