சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்கும் படப்பிடிப்புகள் + "||" + Will start again Shooting

மீண்டும் தொடங்கும் படப்பிடிப்புகள்

மீண்டும் தொடங்கும் படப்பிடிப்புகள்
அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டார். மற்ற நடிகர் நடிகைகள் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்க உள்ளனர்.
கொரோனா 2-வது அலை ஊரடங்கினால் 50-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தற்போது 100 பேரை வைத்து படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அரசு தளர்வு அறிவித்து உள்ளதால் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டார். மற்ற நடிகர் நடிகைகள் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்க உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.

விஜய்யின் 65-வது படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் நடத்த உள்ளனர். இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. பாடல் காட்சியை இங்கு படமாக்க உள்ளனர். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

அஜித்குமாரின் வலிமை படத்தில் விடுபட்ட காட்சிகளை ஐதராபாத்தில் மீண்டும் படமாக்க தயாராகி வருகிறார்கள். பாண்டிராஜ் இறயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விுவிறுப்பாக நடந்த நிலையில் ஊரடங்கினால் நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பையும் மீண்டும் தொடங்குகிறார்கள். படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோரும் படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளனர்.