தேர்வு வாரிய குளறுபடி அனுபமா புகைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை


தேர்வு வாரிய குளறுபடி அனுபமா புகைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை
x
தினத்தந்தி 26 Jun 2021 1:12 AM GMT (Updated: 2021-06-26T06:42:34+05:30)

தேர்வு வாரிய குளறுபடி அனுபமா புகைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை.

தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அதர்வா ஜோடியாக தள்ளிப்போகாதே படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்ற ரிஷிகேஷ் என்பவர் இணையதளத்தில் சென்று மதிப்பெண் பட்டியலை பார்த்தபோது அந்த மதிப்பெண் பட்டியலில் தனது படத்துக்கு பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளதை பார்த்து அதிர்ச்சியானார்.

மதிப்பெண் பட்டியலை வலைத்தளத்தில் அவர் பகிர்ந்ததால் வைரலாகி நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடியை ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்ததோடு, பீகாரில் ஊழல் இல்லாமல் எந்த பணி நியமனமும் நடப்பது இல்லை என்று கண்டித்துள்ளார். இந்த தவறு எப்படி நடந்தது என்று விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாநில கல்வித்துறை கூடுதல் செயலாளர் சஞ்சய்குமார் அறிவித்து உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பீகாரில் நடந்த ஜூனியர் என்ஜினீயர் தேர்வு முடிவில் நடிகை சன்னி லியோன் தேர்ச்சி பெற்றதாக புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story