சினிமா செய்திகள்

சொந்தக் குரலில் ஜீ.வி.பிரகாஷ் பாடினார் + "||" + GV Prakash sang in his own voice

சொந்தக் குரலில் ஜீ.வி.பிரகாஷ் பாடினார்

சொந்தக் குரலில் ஜீ.வி.பிரகாஷ் பாடினார்
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய ஜீ.வி.பிரகாஷ்குமார் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். நடித்துக் கொண்டே இசையமைத்தும் வருகிறார்.
அவர் சமீபத்தில், ‘அழகிய கண்ணே’ என்ற படத்துக்காக சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடினார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். ஆர்.விஜயகுமார் டைரக்டு செய்கிறார். லியோகுமார், சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பிரபு சாலமன் நடிக்கிறார்.