சினிமா செய்திகள்

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் + "||" + Actress Yashika Anand's driving license confiscated

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்
நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை,

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகாஆனந்த் (வயது 21). தனியார் டெலிவிஷனில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்தநிலையில், நடிகை யாஷிகா நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கார் அதிவேகமாக ஓட்டிக்கொண்டு சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இந்த விபத்தில் காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சீட்பெல்ட் அணியாததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகாவிற்கும் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை செய்த நிலையில் தற்போது அதிரடியாக அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து அவர் எந்த வாகனத்தையும் இனி ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை யாஷிகாவிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில்  அவரது ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.